2019 ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறுகிறது? இறுதி முடிவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.!2019 ipl matches final decisen bcci

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடர் எங்கு நடைபெறும் என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியாவில் தான் நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கோப்பைக்கான  தொடரானது 11வது சீசன் முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு 12 சீசன் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. 
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தேவையான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

tamilspark

இந்நிலையில் ரசிகர்கள் இப்போதிலிருந்து போட்டியை காண மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடர் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் போட்டி தொடர் எங்கு நடைபெறும் என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில் இந்தியாவில் தான் நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

tamilspark

இதுதொடர்பாக பிசிசிஐ பொறுப்புச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், “வரும் 2019 ஐ.பி.எல் சீசனின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவிலேயே நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார். முன்னதாக, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.