லைப் ஸ்டைல் சமூகம் காதல் – உறவுகள்

தர்மபுரியில் கர்ப்பமாகிய பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவி; உறவினர் செய்த அட்டூழியம்

Summary:

plus 1 student got pregnant in darmapuri

தர்மபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே எலுமல்மந்தை என்ற ஊரில்  உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் சாந்தி பெயர் மாற்றப்பட்டுள்ளது. திடீரென இவர் கற்பமாகிய விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்று வழக்கம் போலவே காலை பள்ளிக்கு சென்ற மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிரியையிடம் கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லை

ஆனால் வெகுநேரமாகியும் அந்த மாணவி மீண்டும் வகுப்பறைக்கு திரும்பவரவில்லை. பிறகு தோழிகள் கழிவறைக்கு சென்று பார்த்த போது மாணவி சாந்தி மயங்கி கிடந்தார்.

அப்போது அவரது காலடியில் ரத்தம் சிதறிகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியையிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த பெற்றோர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர்.

மாணவி 2 மாத கர்ப்பமாக இருந்ததும், கருவை கலைக்க மாத்திரை உட்கொண்டதால் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மயங்கியதும் தெரியவந்தது. இதனால் குழப்பமும், அதிர்ச்சியுமடைந்த மாணவியின் தாயாரும், பாட்டியும் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர்.

பின்னர் விசாரித்து பார்க்கையில் உறவினர் ஒருவர் அந்த மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளது தெரியவந்தது. மானவையடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகிய அந்த உறவினரால் தான் மாணவி கர்ப்பமாகி இந்த நிலைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.


Advertisement