ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? அதிமுகவின் தலைமைக்கு குறியா? பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு !!



why rajini not started party

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள போதிலும், மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளில்தான் தீவிரமாக உள்ளாரே தவிர கட்சி துவங்கவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்த்தை அதிமுகவில் இணைத்து அதன் மூலம், பாஜக ஆதாயம் அடையலாம் என சில தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்காததன் பின்னணியில், பாஜக தலைவர்கள் சிலரின் ஆலோசனை இருப்பதாக ஒரு தகவல் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

rajinikanth

புதிதாக கட்சி ஆரம்பித்து வாக்கு வங்கியை உருவாக்குவது, கட்டமைப்பை ஏற்படுத்துவது, இருக்கும் கட்சிகளின் நிர்வாகிகளை எதிர்த்து வேலை செய்வதெல்லாம் மிகப்பெரிய வேலை. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என அடுத்தடுத்து தமிழகம் சந்திக்க உள்ள நிலையில், படங்களில் நடித்தபடியே கட்சியை ஆரம்பித்து இதையெல்லாம் செய்வது நடைமுறைக்கு ஆகாது என்று பாஜக தலைவர்கள் சிலர் ரஜினிகாந்த்துக்கு அட்வைஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

rajinikanth

இதற்கு பதிலாக அதிமுகவில் ரஜினிகாந்த்தை சேர்த்து முன்னிலைப்படுத்தலாம் என்பது அவர்கள் திட்டமாக உள்ளதாம். எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோரைவிட ரஜினிகாந்த்துக்கு அதிக முக்கியத்துவத்தை அதிமுகவில் பெற்றுத்தர வேண்டும் என்பது பாஜக திட்டமாக உள்ளதாம். இதனால்தான் சமீபத்தில் அதிமுக தலைமைக்கு நெருக்கடி தரும்விதமாக குறி வைத்து வருமான வரித்துறை ரெய்டுகளை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.