அரசியல் இந்தியா

"அவர்கள் எப்போது அதை நிறுத்திக் கொள்கிறார்களோ; அப்போது நானும் நிறுத்திக் கொள்கிறேன்" பாஜகவை எதிர்த்து ராகுல் ஆவேச பேச்சு!

Summary:

when they stop I will also stop talking against them rahul

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை பிரிக்கும் கொள்கையை எப்போது நிறுத்திக்கொள்கிறாரோ, அப்போது அவருக்கு எதிராக பேசுவதை நானும் நிறுத்திக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி "பிரதமர் மோடி முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். சிலர் நான் எப்போதுமே மோடிக்கு எதிராக பேசி வருவதாக கூறியுள்ளனர். நான் வேண்டுமென்றே அவரை எதிர்த்து பேச வில்லை. அதற்கான காரணங்கள் இருக்கின்றன.

rahul gandhi in madhya pradesh meeting க்கான பட முடிவு

நரேந்திர மோடி அவர்கள் எப்போது நாட்டை பிரிக்கும் திட்டத்தை நிறுத்தி விட்டு சிறு வணிகர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவ முன்வருகிறாரோ அப்போது நான் அவரை எதிர்த்து பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் "பிரதமர் மோடி அவர்கள் நாட்டிலுள்ள 15 முதல் 20 பணக்காரர்களுக்காக வேலை செய்து வருகிறார். மோடி எப்போது நீதியை பற்றியும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றியும் தொழிலாளர்களின் ஆதரவுக்கு பற்றியும் மேலும் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் பேசுகிறாரோ அப்போது நான் அவரை எதிர்த்து பேசமாட்டேன். அதுவரை அவருக்கு எதிராக தான் நான் பேசுவேன்" என்று பேசியுள்ளார்.


Advertisement