இனி தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி! பாஜக மாநில துணைத் தலைவர் பேட்டி!vp-duraisamy-said-the-alliance-is-led-by-the-bjp

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்.

இன்று காலையில் சென்னையில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என தெரிவித்தார்.

bjp

 மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும். அதேபோல் தமிழகத்தில் அதிமுக-திமுக இடையே போட்டிதான் இதுவரை நிலவி வந்தது, இனிமேல் பாஜக-திமுக போட்டியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில் அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில், வி.பி துரைசாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.