மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்: 9 இடங்களை பா.ஜ.க-வும் 5 இடங்களை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றின..!

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்: 9 இடங்களை பா.ஜ.க-வும் 5 இடங்களை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றின..!



Votes have been counted in the election for 16 seats and the final results have been released

 

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு  ஜூன் மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வாகிவிட்டனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணி நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தற்போது அதன் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

4 மாநிலங்களில் மொத்தம் 16 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 9 இடத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றனர்.

கர்நாடகாவில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் பா.ஜ.க சார்பில் நடிகர் ஜெக்கேஷ், லெஹர் சிங் ஆகியோரும் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.