அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அரசியலில் குதித்த தளபதி, நடிப்புக்கு ஓய்வு.?! பதிலளித்த விஜய் தரப்பினர்..!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தில் இடம் பெற்ற முதல் பாடலான "நா ரெடி” பாடல் அண்மையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, சில வாரங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். அந்த நிகழ்ச்சி தான் இப்பொது வரை சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலர், "விஜய் அரசியலுக்கு வரப்போகிறார், இதனால் தான் இந்த விளம்பரம் எல்லாம்" என்று முணுமுணுத்திருந்தார்கள்.
இந்தநிலையில், தற்போது விஜய் 3 ஆண்டுகளுக்கு நடிப்பிற்கு ஓய்வு கொடுப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இந்த மூன்று வருடத்தில் முழு நேரமும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள இருக்கிறார் என்றும் சமூகவலைத்தளத்தில் பரவி வந்தது. இதனையடுத்து இந்த தகவலுக்கு விஜய் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளார்.