அரசியல் தமிழகம்

#Breaking அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்! கடும் சோகத்தில் அமமுக-வினர்.!

Summary:

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து வெற்றிவேலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு செயற்கை சுவாசம் முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. அவர், ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர். இந்தநிலையில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சைபலனின்றி இன்று காலமானார்.


Advertisement