அமைச்சரவை விரிவாக்கம்!.. அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்!.. முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்..!

அமைச்சரவை விரிவாக்கம்!.. அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்!.. முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்..!



Udhayanidhi Stalin takes oath as minister

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021-ஆம் வருடம் மே 7-ஆம் தேதி 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பிறகு அமைச்சரவையில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி இலாக்க மாற்றம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவசங்கரனுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 

அதன் பிறகு தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அமைச்சரவையில் இலாக்கா மற்றத்தோடு, புதிய எம்.எல்.ஏக்கள் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முறை அமைச்சரவையில இடம்கொடுக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.