அரசியல் தமிழகம்

ஒரே ஒரு வார்த்தையால் ஆடிப்போன தமிழகம்!. ஒட்டுமொத்த தமிழகமும் பயங்கர எதிர்பார்ப்பு!.

Summary:

ஒரே ஒரு வார்த்தையால் ஆடிப்போன தமிழகம்!. ஒட்டுமொத்த தமிழகமும் பயங்கர எதிர்பார்ப்பு!.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. ஓபிஎஸ் முதலில் முதல்வராக பதவியேற்றார், பின்னர் சசிகலா அவர்கள் பொதுச்செயலாளர் ஆனவுடன் கட்சி இரண்டாக பிளவடைந்தது.

இதனையடுத்து சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றார். பின்னர் சசிகலா அவர்கள் சிறை சென்றதும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்தனர்.

 பல குழப்பங்களுக்கு இடையே தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும் ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் கொண்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் ஒட்டு போட்ட மக்கள் மிகவும் எரிச்சலடைந்தனர்.

இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நின்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில் அதிமுக-வா இல்லை திமுக-வா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டிடிவி தினகரன் அவர்கள் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார்.

கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பேசும்போது ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினார். இதனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதய ஆட்சியாளர்களுக்கு எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


Advertisement