அம்மா 8 பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன்!. பரபரப்பாக பேசிய டி.டி.வி. தினகரன்!.

அம்மா 8 பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன்!. பரபரப்பாக பேசிய டி.டி.வி. தினகரன்!.


TTV dhinakaran talking in party meeting

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மககள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அங்கு நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசினார்.

TTV

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அ.ம.மு.க கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தாங்கள் எந்தவொரு கூட்டம் நடத்தவும் ஆளும் கட்சியினர் அனுமதி தருவதற்கு மறுக்கிறார்கள். மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் நங்கள் அபாரமாக வெற்றி பெறுவோம் என கூறினார்.

TTV

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி "எனது சிறிய எதிரி அ.ம.மு.க" என்று சொல்கிறார். தற்போதைய முதல்வர் தலைமையில் இருக்கும் அமைச்சர்கள்  காமெடி செய்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் வடிவேலுவை போலவே அவர்களை மக்கள் பார்க்கிறார்கள் என கூறினார். இதுபோன்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு தங்களது கட்சி பெரிய கட்சி என்கிறார் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அ.ம.மு.க கட்சியை குட்டி எதிரி என்றால் எங்களுக்கு கூட்டம் நடத்தக்கூட அனுமதி தராதது ஏன் என்றும், எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து பயந்துதான் அனுமதி தர மறுக்கிறீர்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து அம்மையார் சசிகலா காலில் விழுந்து வணங்கினார் எடப்பாடி பழனிசாமி இதுவும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என  டி.டி.வி. தினகரன்.

மேலும் பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அனால் இன்று என்னை குட்டி எதிரி என்று கூறுகிறார். நான் அம்மாவின் குட்டி தான் அம்மா 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன். வரும் தேர்தலில் தெரியும் அவர்களுக்கு உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று. இவ்வாறு பேசி முடித்தபிறகு ஏராளமான தொண்டர்கள் கர ஓசையை தட்டி எழுப்பினர்.