மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சற்றுமுன் அதிரடி அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்!

stalin announced election manifesto today


stalin-announced-election-manifesto-today

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் பல முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையை தயார் சேட்டு வருகிறது. 

stalin

இதனை தொடர்ந்து திமுகவின்  தேர்தல் அறிக்கையை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை.

10ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை

சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படும் .

கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் 

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும்.

சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.

கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.

சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .

மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுகு திரும்ப அளிக்கப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 8,000 ஆக நிர்ணயக்கப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பு இருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும். உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன.