கொரோனா சமயத்திலும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல்! வாக்கு எண்ணிக்கை எப்போது?

கொரோனா சமயத்திலும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல்! வாக்கு எண்ணிக்கை எப்போது?srilnaga parliment election

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். 

இந்தநிலையில் நேற்று பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என 4 முக்கிய கட்சிகள் போட்டியிட்டன.

srilanka election

சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைபிடித்து அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா அச்சம் இருந்த போதிலும், அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு மதியம் 2.30 அளவில் முதல் கட்ட முடிவுகள் வெளியாகும் என்றும் இறுதியான முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.