அரசியல் சினிமா

நடிகை சித்தார்த்தா! யார் அவர்? எந்த படத்தில் நடித்துள்ளார்! நக்கலாக கேட்ட அமைச்சர்! நடிகர் கொடுத்த பதிலடி.

Summary:

Sithdarth jayakumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் அதிகப்படியான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தேர்ந்தெடுத்து சில நல்ல படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி தற்போது குடியுரிமை மசோதாவிற்கு அதிமுக அதரவு தெரிவித்து பற்றியும் கோபமாக ட்வீட் செய்துள்ளார்.

அவை அனைத்தையும் பற்றி அதிமுக அமைச்சர் ஜெயகுமாருடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஜெயகுமார் நக்கலாக நடிகர் சித்தார்த் யார்? எந்த படத்தில் நடித்துள்ளார் என கேள்வி கேட்டுள்ளார்.

இதை பற்றி தனது கருத்து மூலம் அமைச்சருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நான் யார் என அவர் கேட்கிறார். கவலை இல்லை. 2014ல் சிறந்த நடிகர் விருதை 2017ல் எனக்கு அறிவித்தார்கள். 

ஆனால் அதை தற்போது வரை அரசு எனக்கு கொடுக்கவில்லை. விளம்பரத்திற்காக பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று கோபமாக ட்வீட் செய்துள்ளார்.


Advertisement