அரசியல் தமிழகம்

மக்களே ஓட்டுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் கேளுங்கள்.! பணம் நிறைய இருக்கு..! சீமான் கொடுத்த பக்கா ஐடியா.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்ச

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய காட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், பல கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஓசூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லட்சுமிக்கு ஆதரவாக சீமான் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது சீமான் பேசுகையில், அறிஞர் அண்ணா, தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா என்று கேட்டார். அவர் பெயரைச் சொல்லிப் பல ஆண்டுகளாக அரசியல் செய்கிற இவர்கள் தான், தங்கத்தைத் தவிட்டுக்கு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இம்முறையும் காசு கொடுப்பார்கள். ஆனால் என் மக்களிடம் வேண்டுவது ஒன்றுதான், பணம் கொடுப்பவர்கள் அனைவரும் நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். எனவே ஆயிரம், ஐநூறு வேண்டாம். 5 ஆயிரம், 10 ஆயிரம் கேளுங்கள். அப்போது தான் ஓட்டு போடுவேன் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார்.


Advertisement