அரசியல் தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது.! ஷாக் கொடுத்த அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.!

Summary:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

அவர் கொடுத்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதமான, 50 சதவீதத்தை வன்னியர்களுக்கு கொடுத்து விட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இந்தநிலையில், திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சவுடார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார், அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான். மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசினார். தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களிடம் செல்வாக்கை பெறாதவர்கள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதகவும் தெரிவித்தார்.


Advertisement