# BREAKING பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக.! சூடுபிடிக்கும் புதுச்சேரி தேர்தல்.!

# BREAKING பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக.! சூடுபிடிக்கும் புதுச்சேரி தேர்தல்.!



pmk-withdraws-from-bjp-aiadmk-alliance

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியிலும் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது, புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன், அங்கு நடைபெற்றுவந்த காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்ததால் கவிழ்ந்தது. 

இந்தநிலையில் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ்-விசிக கூட்டணி மீண்டும் போட்டியிடுகிறது. அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்த போதிலும், அக்கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக விலகியுள்ளது. மேலும், முதல்கட்டமாக ஒன்பது பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி இருப்பது புதுச்சேரி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.