அரசியல் இந்தியா

மவுனம் சாதிக்கும் பிரதமர்; மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பும் ராகுல்

Summary:

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், விமானத்தை 540 கோடி ரூபாய்க்கு வாங்கினோம். ஆனால் பிரதமர் மோடி, பிரான்ஸ் நிறுவனத்திடம் 1 விமானத்திற்கு 1600 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் பொய் வாக்குறுதிகள் அளித்து வருகிறார். இந்த ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு கிடைத்துள்ளது. சாமானிய மக்களை பிரதமர் முட்டாளாக்குகிறார். நாடு முழுவதும் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

rahul in rajasthan க்கான பட முடிவு

 2 கோடி வேலைவாய்ப்புகள், ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம், பெண்கள் பாதுகாப்பு என பிரதமர் உறுதியளித்தார்.ஆனால் அனைத்திலும் தோல்வி கிடைத்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் மற்றும் ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால், எனது கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளில், 15 தொழிலதிபர்களின் 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி பற்றி கேட்ட போது, அவர் மவுனத்தையே பதிலாக அளித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை பிரதமர் ஏன் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.


Advertisement