அதிமுக பொதுக்குழுவில் நடந்த அநாகரிக செயல்.! டிவியை பார்த்து உயிரிழந்த தொண்டன்.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!



ops tribute post for admk member

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பமானது முதல் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இரு தரப்பினருக்குமிடையே பெரும் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அரங்கத்திற்குள் வந்த போது அவருக்கு எதிராக முழக்கங்கள் மற்றும் கோஷங்கள் எழுந்தது. மேலும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என இபிஎஸ் தரப்பினர் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அந்த அநாகரிக செயலை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, அதிமுக தொண்டன் ஒருவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, அவருக்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட பதிவில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி, புதுபிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த கழக மேலவை பிரதிநிதியும், எனது சோதனை காலங்களில் உடனிருந்தவரும், என்னுடைய தீவிர ஆதரவாளருமான அன்புச் சகோதரர் திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று  (23.6.2022) அஇஅதிமு கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்

உயிரிழந்த திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.