அரசியல் தமிழகம்

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்..! முதல்வர், துணை முதல்வர் தனித்தனியே ஆலோசனை.!

Summary:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தற்போது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற போட்டி நிலவி வருவதால் அதிமுகவில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் மற்றும்  ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இருந்துவருகிறது.

இந்தநிலையில், அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதல்வர், துணை முதல்வருடன் தனித்தனியே அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, அரசு கொறடா ராஜேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Advertisement