அரசியல் தமிழகம்

தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!

Summary:

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவராக வானதி ஸ்ரீனிவாசனை ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். உடனடியாக அவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் தேசிய மகளிா் அணித் தலைவராக இருந்த விஜயா ரஹாத்கா், அண்மையில் கட்சியில் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றதை அடுத்து அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பா.ஜ.க. மகளிா் அணியின் தேசியத் தலைவா் பதவிக்கு வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். 

வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் முன்னணிப் பேச்சாளா் ஆவாா். வழக்கறிஞரான இவர் இளம் வயதிலேயே அகில பாரத வித்யாா்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இணைந்து செயலாற்றியவா். ஒரு தமிழ் பெண்மணி ஒரு தேசிய கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறி வானதி சீனிவாசன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement