மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக ஆசைப்பட்டால் இந்தி பேச கற்றுக் கொள்ள வேண்டும்: குஷ்பு அதிரடி பேச்சு..!!

மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக ஆசைப்பட்டால் இந்தி பேச கற்றுக் கொள்ள வேண்டும்: குஷ்பு அதிரடி பேச்சு..!!


M.K.Stalin should learn to speak Hindi if he wants to become Prime Minister

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தி கற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் மேலும், தி.மு.க.வில் இருப்பவர்கள் டெல்லிக்கு சென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று விருப்படுவதாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக ஆசைப்படுவதாகவும், அதன் காரணமாக அவருக்கு இந்தி கற்றுக் கொடுக்க தான் தயாராக இருப்பதாக கூறினார்.

தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது ஆனால் அவர்கள் இந்தியை எதிர்ப்பதாக பிரச்சாரம் செய்து தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக கூறிய குஷ்பு தமிழகத்தில் இந்தி மொழியை கற்க இந்த வருடம் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.