அராஜகத்துக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்.! கைதான பிறகும் பின்வாங்காத குஷ்பு.!

பெண்களின் கண்ணியத்திற்காக எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


kushbu tweet after arrest

பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில், திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது காரில் சென்ற குஷ்பூவை போலீஸார் முட்டுக்காடு அருகே நிறுத்தி கைது செய்துள்ளனர். 


கைதான பிறகு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, "பெண்களின் கண்ணியத்திற்காக எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம். பிரதமர் மோடி ஜி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றி தான் பேசுவார், நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அராஜகத்துக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடுவோம்” என பதிவிட்டுள்ளார்.