அரசியல் தமிழகம்

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்? குஷ்பு கடும் காட்டம்.!

Summary:

திருமாவளவன் பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை திமுக கண்டிக்காதது ஏன் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை பற்றி இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த குஷ்பு காட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். 

செய்தியாளர்களிடம் குஷ்பு பேசுகையில், கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு மதத்தை சார்ந்த பெண்களை இழிப்படுத்தி திருமாவளவன் பேசியது மிகவும் தவறு என குஷ்பு தெரிவித்துள்ளார். 


Advertisement