நடிகை குஷ்புவை பதவியில் இருந்து நீக்கிய காங்கிரஸ்.! குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.!

நடிகை குஷ்புவை பதவியில் இருந்து நீக்கிய காங்கிரஸ்.! குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.!



khushbus-resignation-from-congress

நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது அவர் திமுகவில் சேர்ந்தார். அதன்பிறகு அந்த கட்சியை விட்டு வெளியேறினார். 2014-ல் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். இந்தநிலையில் நடிகை குஷ்பு 2014 முதல் ஆறு வருடங்களுக்கு மேலாக காங்கிரசில் இருந்து வருகிறார். 

இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, பாஜகவில் இணைய போவதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க-வில் இன்று இணைய உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. 

kushboo

இதனையடுத்து சென்னையில் இருந்து குஷ்பு நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில், அவரிடம் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகினார். மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.