அரசியல் தமிழகம் சினிமா

தேர்தல் பிரச்சாரத்தில் உளறித்தள்ளிய பிரபல காமெடி நடிகர் கஞ்சாகருப்பு! அவர் என்ன சொன்னார் தெரியுமா?

Summary:

kanja karuppu wrongly talk in election canvas

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியில் நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளனர். சில காமெடி நடிகர்களும் பேசி வருகின்றனர். 

மீண்டும் நரேந்திர மோடியை முதல்வராக்குவோம் க்கான பட முடிவு

இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது பேசிய கஞ்சா கருப்பு , "மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம்" என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பா.ம.க.வினரிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது.


ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிலர் இதுபோன்று தடுமாறி பேசுவது வழக்கம். தேர்தல் நேரத்தில் ஒரு சில சுவாரஸ்யங்களும் நடக்கத்தான் செய்கிறது.


Advertisement