அரசியல் தமிழகம் சினிமா

தமிழக அரசியல் களம் மீண்டும் உங்களுக்காக காத்திருக்கிறது.! விஜயகாந்தை வாழ்த்திய கமல்ஹாசன்!

Summary:

kamal talk about vijayakanth

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நேற்று 25.08.2020 பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தமிழ் சினிமாவில் இதுவரை 20க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் போலீசிஸ் அதிகாரியாக நடித்து கேப்டனாக அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜய்காந்த். 

சமூக அக்கறை, அரசியல் மாற்றம், தேசப்பற்று என தனது கொள்கைகளை திரைப்படங்களில் தொடர்ந்து சொல்லி அதன்மூலம் அரசியலிலும் நுழைந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் தான் விஜயகாந்த். இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். 

நேற்று அவரது பிறந்தால் விழாவிற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே" என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.


Advertisement