அரசியல் தமிழகம்

காலில் அறுவை சிகிச்சை..! வலி தாங்கமுடியாத கமல்.! ஒற்றை காலில் நின்று பிரச்சாரம்.! கமலின் மகள் பகிர்ந்த புகைப்படம்.!

Summary:

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வே

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனால் கமல்ஹாசன் தினமும் கோவை தெற்கு தொகுதி மக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், காலில் அறுவை சிகிச்சை செய்த பின், வலியை பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், காலில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் கால் வலியுடன் நீண்ட நேரம் பிரசார வாகனத்தில் ஒற்றை காலில் நிற்கும் புகைப்படத்தை கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement