
duraimurugan talk about rajini
தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது, என தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம், தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என தெரிவித்தார்.
தமிழகத்தில் நடக்கும் அரசியல் பற்றி நடிகர் ரஜினிக்கு தெரியவில்லை, அவர் அரசியல் பயணத்தில் தொடர்ந்து இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement