திருநங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

திருநங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!


dmk give chance to transgender

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடையுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் மூன்றாம் பாலினத்தவரான கங்கா என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆளும் கட்சியான திமுக. வேலூர் மாநகராட்சிக்கு 37-வது வார்டுக்கு உட்பட்ட ஓல்டு டவுன் உத்திர மாதா கோயில் பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை கங்கா. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 

இதனையடுத்து கங்கா அப்போதிலிருந்து கட்சிப் பணி, சமூக நலப்பணி, நல திட்ட பணி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். கொரோனா காலத்தில் இவர் ஆற்றிய பணி இந்த வார்டில் உள்ள பொது மக்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 37-வது வார்டில் தனக்கு சீட் ஒதுக்கும் படி தலைமைக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்தநிலையில், முதல்வர் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் திருநங்கை கங்கா இடம்பெற்றுள்ளார்.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் களம் காணும் முதல் திருநங்கை கங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்தற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.