இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அநியாயத்துக்கு எதிராக போராடினார்களா.? பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் அதிரடி கேள்வி.!

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அநியாயத்துக்கு எதிராக போராடினார்களா.? பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் அதிரடி கேள்வி.!


did-muslims-and-christians-fight-against-injustice-seam

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான்  இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறிய விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையே  பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூரில் நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பேசியிருந்த சீமான் அநியாயக்காரர்களிடம் ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தான் என பரபரப்பான  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறியிருந்தார் .

tamilnaduஇதற்கு பல்வேறு தரப்பு தலைவர்களிடமிருந்தும் அரசியல் தலைவர்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கிறார் .

tamilnaduபத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் கேட்டுக்கொள்கிறேன் ஆனால் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எந்த அநீதிக்கு எதிராக எங்கே போராடினார்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர்கள் அநியாயக்காரர்களுக்கு வாக்களித்ததால் தான் நானும் இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட என் போன்ற பிள்ளைகளும் தெருவில் நிற்பதாக தெரிவித்திருக்கிறார்.