நேற்று புறக்கணிப்பு.! இன்று பங்கேற்பு.! துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

நேற்று புறக்கணிப்பு.! இன்று பங்கேற்பு.! துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்


Deputy Chief OPS participation in government program

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது அந்த குழுமத்தின் தலைவராக இருக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

நேற்று, கொரோனா பொதுமுடக்கம் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடனான கூட்டத்தையும் புறக்கணித்தார்.

ops

நேற்று இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நிலையில் இன்று ஓ.பி.எஸ் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் ஓபிஎஸ்-இன் அரசியல் நகர்வு என்னவென்று தெரியாமல் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது.