"இரவோடு இரவாக பாஜக போட்ட மாஸ்டர் பிளான்.." புதிய சிக்கலில் அதிமுக.!

"இரவோடு இரவாக பாஜக போட்ட மாஸ்டர் பிளான்.." புதிய சிக்கலில் அதிமுக.!



bjp-master-plan-creates-new-trouble-for-admk

2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.

திமுக தலைமையில் காங்கிரஸ் விசிக மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கம்யூனிஸ்ட் மற்றும் பிற கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. மறுபுறம் கடந்த தேர்தல்களில் இணைந்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பிஜேபி கட்சிகள் இந்த முறை எதிரெதிர் அணியில் போட்டு விடுகின்றன. அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க புறக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

politicsஇந்நிலையில் நேற்று நள்ளிரவு பாஜக அமமுக மற்றும் ஓபிஎஸ்  அணிகளுக்கிடையே தொடங்கிய பேச்சு வார்த்தை இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. இதன்படி டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணியினர் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர். தென் மாவட்டங்களில் இரண்டு தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளை அமமுக-விற்கு பாஜக ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதே போல் ஓபிஎஸ் அணியினருக்கும் தென் மாவட்டங்களில் இரண்டு தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

politicsமேலும் மூவேந்தர் முன்னணி கழகமும் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறது. ஓபிஎஸ் டி டிவி தினகரன் மற்றும் சேதுராமன் ஜி ஆகியோர் பாஜகவில் இணைந்து இருப்பதால் முக்குலத்தோரின் ஆதரவு அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதைத் தவிர பாமகவும் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்தால் பாஜக தலைமையிலான கூட்டணி அதிமுகவை சிக்கலில் தள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.