தமிழகத்தில் பொருளாதார முடக்கம் ஏற்படும் அபாயம்..! முதலமைச்சரை சாடிய அண்ணாமலை..!!annamalai-about-stalin-QDWK5Q

மிழகத்தில் பெருமளவில் தொழில் முடக்கமும், பொருளாதார முடக்கமும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் பெருமளவில் தொழில் முடக்கமும், பொருளாதார முடக்கமும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆனால், முதல்வரும், மற்ற அமைச்சர்களும் இதுகுறித்து எந்தக் கவலையுமின்றி, திரைப்படங்கள் பார்ப்பதும், அதற்கு விமர்சனங்கள் எழுதுவதிலும் மும்முரமாக இருக்கின்றனர்." என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை, பாஜக தமிழ்நாட்டு என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தமிழ்நாடு முதல்வரையும் மற்ற அமைச்சர்களையும் விமர்சனம் செய்துள்ளார்.