பாதுகாப்புடன் துவங்கியது வாக்குப்பதிவு! குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்ட முதலமைச்சர்!

பாதுகாப்புடன் துவங்கியது வாக்குப்பதிவு! குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்ட முதலமைச்சர்!


andra-cheif-minisiter-vote-with-his-family


இன்று ஆந்திர மாநிலம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளது.

election

தேர்தல் நடக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், அமரவாதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து வாக்களித்தார்.