அரசியல் இந்தியா

கேரளாவிற்கே சென்று கேரள அரசை எச்சரித்த அமித் ஷா! பாஜக ஐயப்ப பக்தர்களோடு துணை நிற்கும் என உறுதி

Summary:

amit sha warns kerala govt

கேரளாவிற்கு இன்று சென்ற பாஜக தலைவர் அமித் ஷா சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்.

கேரள மாநிலத்திற்கு இன்று சென்ற பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கண்ணூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாஜக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பா.ஜ.க கேரளா முன்னாள் மாநில தலைவர் மாரார் நினைவாக இந்த அலுவலகம் “மாரார் பவன்” என பெயரிடப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "இன்று கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில ஹிந்து அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரம் தொண்டர்களை கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கைது செய்துள்ளது. பக்தர்களுடன் பா.ஜ.க பாறை போல் உறுதியாக நிற்கிறது. இது இடதுசாரி அரசிற்கு விடப்படும் எச்சரிக்கையாகும். 

இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதையும், நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுகிறேன்.

ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது; பா.ஜ.க எப்போதும் அய்யப்ப பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் துணை நிற்கும் என்று உறுதிபடுத்தினார்.

சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என பினராய் விஜயனுக்கு கேரள அரசிற்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமித் ஷா.


Advertisement