அரசியல் தமிழகம்

பிரேக்கிங்: அதிமுக கட்சிக்கு இப்படி ஒரு சோகமா? சோகத்தில் மூழ்கிய அதிமுக தொண்டர்கள்!

Summary:

admk mla dead

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர் கனகராஜ். 

64 வயது நிறைந்த இவர் இன்று காலை வழக்கம்போல் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனகராஜ்க்கு ரத்தினம் என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த கனகராஜின் உடல் சுல்தான் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது அதிமுக கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்சியினர் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 


Advertisement