அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்? எடப்பாடி போட்ட மாஸ்டர் ப்ளான்..

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்? எடப்பாடி போட்ட மாஸ்டர் ப்ளான்..


admk meeting

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி விட்டு ஒரே தலைமையாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தரப்பில் செய்து வருகின்றனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறும் என்று திடீரென எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பதவி வகிக்கும் கழக தலைமை நிர்வாக செயலாளர் பெயரில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இந்த கூட்டம் செல்லாது என அவர் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொருளாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பொறுப்பை நீக்கம் செய்வது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அதிமுக பொருளாளர் பதவி எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.