அரசியல் தமிழகம்

சூடுபிடிக்கும் அரசியல் களம்!.அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைந்தார் !

Summary:

admk former MP joined in DMK


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார். 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடந்த 2012-ல் அமைச்சர் பதவியில் இருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அப்போது சி.வி.சண்முகத்திடம் இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி லட்சுமணனுக்கு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியபோது ஆதரவு தெரிவித்த முன்னணி எம்பிகளில் இவரும் ஒருவர்.  மாவட்டச் செயலாளர் பதவி பறிபோன நிலையில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், லட்சுமணன் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்காக களப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்த விஷயம் தற்பொது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Advertisement