குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.! சேர்ந்து ஆடிய தொண்டர்கள்.!

குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.! சேர்ந்து ஆடிய தொண்டர்கள்.!



admk-candidate-election-canvas-with-dance

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டோவில் சென்று ஓட்டு சேகரிப்பது, கடையில் டீ குடித்துக்கொண்ட மக்களிடம் ஓட்டு சேகரிப்பது என விதவிதமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், மேல் கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் தொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியை கைபற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளுர் வேட்பாளரான பொன்.ஜெயசீலனை களமிறக்கியது அதிமுக.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ஜெயசீலபலன் அந்த தொகுதியின் பல பகுதிகளுக்குச் சென்று மக்களை பல்வேறு விதங்களில் கவர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் அவர், மேல் கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவருக்கு பேண்ட் வாத்தியம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பெண்கள் உற்சாக நடமாடி கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை வரவேற்றனர். ஒரு கட்டத்தில் வேட்பாளர் பொன்.ஜெயசீலனும் அவர்களோடு நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.