வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது ஏன்?.. தெரிஞ்சுக்கோங்க பாஸ்.!



Why give water to home visitors

இந்திய மக்களின் மரபுப்படி வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பது வழக்கம். வருபவர் கோபத்துடன் வந்தாரா?, மன மகிழ்ச்சியை வெளிப்படுத்த வந்தாரா என்பது யாருக்கும் தெரியாது. 

அவர் பல இடங்களுக்கு சென்று தாகத்துடனும் வந்திருக்கலாம். இதனால் உடலில் ஆற்றல் குறைந்திருக்கும். அதேபோல மனரீதியாகவும் சோர்வு இருக்கும். இவ்வாறான மன அழுத்தம், கோபம் உட்பட பல விஷயங்களை கட்டுப்படுத்தும் தன்மை என்பது தண்ணீருக்கு இருக்கிறது. 

Latest news

அதனாலேயே ஒருவர் வீட்டிற்கு வந்ததும் முதலில் அவரின் மனநிலையை சரிசெய்ய தண்ணீர் கொடுக்கப்படுகிறது. தண்ணீர் குடிப்பதால் நமது மனநிலை தன்மையை அடையும். கோபம் மற்றும் வெறுப்புணர்வு போன்ற ஆற்றல் இருந்தாலும், அவை கட்டுப்படும். 

நாமே கோபத்தில் இருக்கும்போது சிறிதளவு தண்ணீர் குடித்தால் அந்த நீர் சில நிமிடங்களில் நமது மனநிலையை சாந்தப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.