விற்பனைக்கு வரும் வெள்ளை வெங்காயம்.! அதன் நன்மைகள் என்ன தெரியுமா.?white onion benifits

சமையல் பயன்பாட்டிற்கு வெங்காயம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்திய உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க கூடிய ஒரு பொருள் வெங்காயம். வெங்காயத்தில் சிறியது மற்றும் பெரியது என்று இருவகை உள்ளது. அதில் வெள்ளை வெங்காயம் என்றும் ஒரு வகை உள்ளது.

ஆரம்பத்தில் நகரங்களில் உள்ள கடைகளில் மட்டுமே வெள்ளை வெங்காயம்  காணப்பட்டது. தற்போது அணைத்து பகுதிகளிலும் இந்த வெள்ளை வெங்காயம்  காணப்படுகிறது. வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி, ஃபிளவனாய்டுகள் மற்றும் பைட்டோனுயூட்ரின்கள் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருள் என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

white onion

வெள்ளை வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இது இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. எலும்பு அடர்த்தியை மேம்படுத்த வெள்ளை வெங்காயம் உதவுகிறது. இரவு உறங்கும் போது படுக்கை அறையில் சுற்றிலும் வெள்ளை வெங்காயத்தை நறுக்கி வைத்தால், இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.