"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
நீங்கள் தினமும் செய்யும் இந்த பழக்கவழக்கம் புற்றுநோயை வரவைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.? உடனே இப்பழக்கங்களை கைவிடுங்க.!
நாம் அன்றாடம் செய்யும் சிறுசிறு தவறுகள் பலவிதமான மோசமான வியாதிகளை நமக்குள் உருவாக்குகிறது. அதில் ஒன்றுதான் புற்றுநோய். கீழே வரும் பழக்கங்களை செய்வதால் புற்றுநோய் நம்மை எளிதில் தாக்குகிறது.
1 . புகை பிடித்தல் அல்லது புகைபிடிப்பவரின் அருகில் இருத்தல்.
புகைபிடிப்பதும் அல்லது புகைபிடிப்பவர்கள் அருகில் அதிக நேரம் இருப்பதும் புற்றுநோய் வரவைக்கும் முக்கியமான காரணிகளில் ஓன்று.
2 . உடல் உழைப்பே இல்லாத வேலை அல்லது வாழ்க்கை முறை.
இன்றைய நாகரிக உலகில் பலருக்கும் உடல் உழைப்பு என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதும் புற்று நோயை வரவைக்கும்.
3 . காற்று மாசு.
மாசடைந்த காற்றில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் ஏராளம் இருப்பதால், அத்தகைய காற்றை அதிகம் சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
4 . அதிக சூடான பானத்தை குடிப்பது.
நம்மில் பலருக்கும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உண்டு. டீ அல்லது காப்பி குடிப்பது தவறு இல்லை. ஆனால், மிகவும் சூடாக டீ அல்லது காபி அல்லது ஏதாவது ஒரு பானத்தை மிக சூடாக அடிக்கடி குடித்துவந்தால் உணவுக்குழாய் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது.