புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சற்று ஆறுதல் படுத்திய தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது ஏறுமுகம், இறங்கு முகம் கண்டு வருகிறது. ஒரு நாள் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை அடுத்த நாளே கிடுகிடுவென உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. இவ்வாறு தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.45,880க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,735-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாம் இன்று கிராமும் 79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,200-க்கு விற்பனை ஆகிறது.