உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் துவரம்பருப்பு தோசை.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் துவரம்பருப்பு தோசை.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!


Thuvaramparupu Dosa Cooking Tips Tamil

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் துவரம்பருப்பு தோசை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

துவரம் பருப்பில் உடலுக்கு நன்மையளிக்கும் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன் வைட்டமின் பி, வைட்டமின் சி, தாதுசத்தும் உள்ளது.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - அரை கப் 
புழுங்கல் அரிசி - ஒரு கப் 
காய்ந்த மிளகாய் - 6 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப தேங்காய்த்துருவல் - ஒரு தேக்கரண்டி

Thuvaramparupu Dosa

செய்முறை :

★முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊறவைத்து காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

★அரைத்த மாவில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

★பின் தோசைகல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பி போட்டு பொன்னிறமாக எடுத்து பரிமாறினால் சூப்பரான துவரம்பருப்பு தோசை தயாராகிவிடும்.