லைப் ஸ்டைல்

பசி..! மனிதனிடம் உணவை கெஞ்சி கேட்கும் விலங்கு..! வைரல் வீடியோ.!

தம்பி என்னையும் கொஞ்சம் கவனிப்பா என்பதுபோல் கடல்வாழ் சீல் விலங்கு ஒன்று மனிதனிடம் கெஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த உலகில் பசி என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. பசி வந்துவிட்டால் பத்தும் பறந்துபோய்விடும் என்ற பழமொழிகூட உண்டு. மனிதர்களை பார்த்தால் அஞ்சி ஓடும் விலங்குகள் கூட, சில நேரங்களில் மனிதனிடம் தங்கள் உணவு தேவையை வெளிப்படுத்தி உணவை கேட்டு வாங்கி சாப்பிடும் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம்.

உதாரணத்திற்கு அண்மையில் அணில் ஒன்று சிறுவன் ஒருவர் கொண்டுசென்ற தண்ணீர்பாட்டிலை சுட்டிக்காட்டி தனக்கு தண்ணீர் வேண்டும் என்பது போல நடந்துகொண்டதும், சிறுவன் தண்ணீர் வழங்கியதும் அதை குடித்துவிட்டு மகிழ்ச்சியோடு சென்ற காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுஷாந்த நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோ காட்சியில், நபர் ஒருவர் மற்ற சீல் விலங்குகளுக்கு உணவளித்துக்கொண்டிருக்கையில், அவரது கால் அருகே மற்றொரு சீல் விலங்கு நின்றுகொண்டு, அந்த நபரின் கால்களை தட்டி தட்டி, எனக்கும் கொஞ்சம் கொடுப்பா என்பது போல் நடந்துகொள்கிறது.  தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement