டீ, காபியுடன் சாப்பிட சூப்பரான பிரெட் வடை.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!

டீ, காபியுடன் சாப்பிட சூப்பரான பிரெட் வடை.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!


tasty-bread-vada-recipe

சூப்பரான பிரட் வடை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

பொதுவாக வீட்டில் உளுந்த வடை, கல்ல வடை, கேழ்வரகு வடை, கம்பு வடை போன்றவற்றை சாப்பிட்டிருப்போம். இன்று டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் பிரட் வடை எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப

கருவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயம் - 2

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

பிரெட் துண்டுகள் - 6

இஞ்சி - சிறு துண்டு

Tasty bread vada

செய்முறை :

★முதலில் வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

★பின் பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

★அடுத்து உளுந்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து, கலந்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.

★அரைத்த மாவுடன் வெங்காயம், கருவேப்பிலை மற்றும் பிரட் தூள் போட்டு பிசைய வேண்டும்.

★இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் மாவை வடைகளாக தட்டி போட்டு எடுத்தால் பிரெட் வடை தயாராகிவிடும்.