சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறினால் என்ன அறிகுறி தெரியுமா..? அந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்.! உஷாரா இருங்க..! - TamilSpark
TamilSpark Logo
லைப் ஸ்டைல்

சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறினால் என்ன அறிகுறி தெரியுமா..? அந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்.! உஷாரா இருங்க..!

பல நேரங்களில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்கள், அறிகுறிகளை வைத்தே சிலவகையான வியாதிகளை நம்மால் முன்கூட்டியே அறிய முடியும். அந்த வகையில் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறினால் என்ன பிரச்சனையாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

* உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் இரத்த போக்கு ஏற்பாடல் கூட சிறுநீருடன் இரத்தம் கலந்து சிவநிறத்தில் வெளியேற வாய்ப்பு உள்ளது.

* அளவுக்கு அதிகமான புகைப்பழக்கத்தால் சிறுநீர் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். அதுபோன்ற சமயத்தில் சிறு சிறு இரத்த கட்டிகள் சிறுநீர் மூலம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் கூட சிறுநீரில் இரத்தம் வெளியேற வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் கற்கள் உடைந்து சிறுநீர் பாதையில் வெளியேறும்போது ஏற்படும் காயங்களால் கூட சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும்.

* சிலவகை இரத்தம் சம்மந்தமான நோய்களால் கூட சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகம்.

* வாந்தி, மாயம், அடிவயிறு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறினால் உடனே மருத்துவரை பார்க்கவேண்டியது அவசியம்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo