தமிழகத்தில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டு கோஸ்டிஸ்வரர்..! பிச்சை எடுக்க அவர் சொன்ன வித்தியாசமான காரணம்..!

Sweden man begging in tamil nadu


sweden-man-begging-in-tamil-nadu

மன நிம்மதி வேண்டி வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவர், கோவையில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அதில் சாப்பிட்டு வரும் சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையில் உள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார். தான் பல்வேறு உதவிகள் செய்தும், தனக்கு மனநிம்மதி கிடைக்கவில்லை என்று வருந்திய கிம், பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் பிச்சை வாங்கி வருகிறார்.

பொதுமக்கள் தரும் பணத்தில்தான் தனக்கு வேண்டிய உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார் கிம். மக்கள் தரும் பணத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் தனக்கு மனநிம்மதி கிடைப்பதாக கூறுகிறார் கிம்.