ஆரோக்கியம்: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிவப்பரிசி ஆப்பம்... சுடச்சுட சுவையாக செய்வது எப்படி...



Sugar patient diet recipes sivapparici aappam

இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம்.

அதிகம் சத்துக்கள் நிறைந்த சிவப்பரிசி ஆப்பம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசி - அரை கிலோ
தேங்காய் - 1
தேங்காய் துருவல் - 2 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
தண்ணீர், உப்பு - சிறிதளவு

Sivapparchi aapam

முதலில் சிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.

பின்னர் அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து மாவை ஊற்றி நன்கு பரவி விடவும் பின் மூடி போட்டு நன்றாக வேக விடவும். ஒரு நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான சிவப்பரிசி ஆப்பம் தயார். சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும். தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சாப்பிடலாம்.